
பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்குப் பதிலடியாக நடத்தப்பட்ட `ஆபரேஷன் சிந்தூர்’ பற்றி உலக நாடுகளுக்கு விளக்கும் நோக்கில் காங்கிரஸ் எம்.பி சசி தரூர் தலைமையில் மத்திய பா.ஜ.க அரசு அனைத்துக் கட்சிக் குழு அமைத்திருக்கிறது.
இந்தக் குழு அமெரிக்காவிற்கு சென்றிருக்கிறது. அங்கு இந்தியத் தூதரகத்தில் அனைத்துக் கட்சிகள் கூட்டம் நடைபெற்றது.
அதில் உரையாற்றிய சசி தரூர், “உங்களுக்குத் தெரியும், நான் அரசாங்கத்திற்காக வேலை செய்யவில்லை. நான் எதிர்க்கட்சிக்காக வேலை செய்கிறேன். நானே ஒரு தலையங்கத்தில் கடுமையாக, ஆனால் புத்திசாலித்தனமாகத் தாக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என எழுதியுள்ளேன்… இந்தியா அதைத்தான் செய்தது என்று சொல்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
காஷ்மீரின் பஹல்காமில் ஏப்ரல் 22-ந்தேதி பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 26 பேர் பலியானார்கள். இந்த சம்பவத்திற்கு பின்னணியில் பாகிஸ்தானை சேர்ந்த, தடை செய்யப்பட்ட லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத இயக்கத்துடன் இணைந்த ரெசிஸ்டண்ட் பிரன்ட் என்ற முன்னணி அமைப்புக்கு தொடர்பு உள்ளது தெரிய வந்தது.
இதற்கு பதிலடியாக, இரு வாரங்களுக்கு பின்னர் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மீது இந்திய ராணுவம் பயங்கரவாத இலக்குகளை குறிவைத்து, தாக்குதலை நடத்தியது.
பாகிஸ்தானில் செயல்பட்ட 9 பயங்கரவாத தளங்களை இலக்காக வைத்து, இந்திய ஆயுத படைகள் மிகவும் துல்லியமாக ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை மேற்கொண்டு, தாக்குதல் நடத்தியது.
உலகெங்கிலும், ஒவ்வொரு நாட்டிலும் உள்ள பொதுமக்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் எனப் பல்வேறு பிரிவினரிடம் பேசுவதே எங்கள் யோசனை.
இன்று இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் அமைதி நிலவுகிறது. ஆனால் அடிப்படை பிரச்னை இன்னும் இருக்கிறது. எனவே இது எங்களுக்கு ஒரு வாய்ப்பு. நாங்கள் ஒவ்வொரு நாட்டிலும் நிர்வாகக் குழு உறுப்பினர்களை, சட்டமன்ற உறுப்பினர்களை, செல்வாக்கு மிக்க வெளியுறவுக் கொள்கை நிபுணர்களையும் சந்திப்போம்.

நாங்கள் ஒரு கொடூரமான பயங்கரவாத தாக்குதலின் வடுக்களைத் தாங்கிய ஒரு நகரத்தில் இருக்கிறோம். இந்தியர்கள், அமெரிக்கர்கள் மற்றும் பிறர் உள்பட பாதிக்கப்பட்டவர்களுக்கு எங்கள் ஆதரவைத் தெரிவிக்க மட்டுமல்லாமல், பயங்கரவாதம் ஒரு உலகளாவிய அச்சுறுத்தல் என்பதை அடிக்கோடிட்டுக் காட்டவும் நாங்கள் வந்துள்ளோம்.
அதற்கு பதிலடியாகதான் அமெரிக்கா தனது ‘ஆபரேஷன் நெப்டியூன் ஸ்பியர்’ மூலம் பயங்கரவாதியை எவ்வாறு வேட்டையாடியது என்பதையும் பார்த்தோம்.” எனக் குறிப்பிட்டார்.