
புதுடெல்லி: நான்கு மாநிலங்களில் காலியாக உள்ள 5 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு ஜூன் 19ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் இன்று தெரிவித்துள்ளது.
குஜராத் மாநிலத்தின் இரண்டு சட்டப்பேரவைத் தொகுதிகள், கேரளா, மேற்குவங்கம், பஞ்சாப் மாநிலங்களில் தலா ஒரு பேரவைத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடக்க இருக்கிறது. வாக்குகள் ஜூன் 23ம் தேதி எண்ணப்படும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.