• May 25, 2025
  • NewsEditor
  • 0

‘ஓய்வு பற்றி என்ன பேசப்போகிறார்?’

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது கடைசி லீக் போட்டியில் இன்று குஜராத் அணியை எதிர்கொள்கிறது. இந்தப் போட்டியில் தோனி தனது ஓய்வைப் பற்றியோ எதிர்காலம் பற்றியோ பேச அதிக வாய்ப்பிருக்கிறது. உடல்ரீதியாக தோனி நிறைய சிரமங்களை எதிர்கொண்டு வருவதால் இதுவே தோனியின் கடைசி சீசனாக இருக்கும் என்கிற கருத்தும் நிலவி வருகிறது. ஓய்வைப் பற்றி தோனி என்னதான் சொல்லப்போகிறார்?

தோனி

‘டிராக் ரெக்கார்ட்!’

தோனி 2020 ஆம் ஆண்டில் சர்வதேசப் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். அப்போதிருந்தே அவர் ஐ.பி.எல் இல் எப்போது ஓய்வு பெறுவார் எனும் கேள்வியும் எழத் தொடங்கிவிட்டது. 2020 ஆம் ஆண்டு நடந்த சீசனின் முடிவில் ஓய்வு பற்றிய கேள்விக்கு ‘Definitely Not’ என பதில் சொல்லியிருந்தார். 2020 சீசன் சென்னை அணிக்கு மிக மோசமான சீசனாக இருந்திருக்கும்.

ஐ.பி.எல் வரலாற்றிலேயே முதல் முறையாக சென்னை அணி ப்ளே ஆப்ஸூக்கு கூட செல்லாமல் வெளியேறியது. அதன்பிறகு 2021 சீசனில் மீண்டும் வந்து கேப்டனாக சென்னை அணியை சாம்பியனாக்கியிருப்பார் தோனி. அந்த சீசனின் முடிவிலும் ‘Still I haven’t Left Behind’ நான் இன்னும் எதையும் விட்டுச் செல்லவில்லை என ஓய்வு முடிவுகளுக்கு முற்றுப்புள்ளி வைத்திருப்பார்.

Dhoni
Dhoni

‘சென்னையில்தான் கடைசிப் போட்டி!’

மேலும், சென்னையில்தான் என்னுடைய கடைசிப் போட்டியை ஆடுவேன் என்றும் இந்த சீசனின் முடிவில்தான் தெரிவித்திருந்தார். 2023 சீசனின் முடிவில் கோப்பையை வென்றுவிட்டு, ‘நான் ஓய்வு பெற இதுதான் சரியான தருணம். ஆனால், ரசிகர்களுக்காக இன்னும் ஒரு சீசனில் ஆட முயற்சிக்கிறேன்.’ என்றார். நடப்பு சீசனின் தொடக்கத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசுகையில், ‘நான் வீல் சேரில் இருந்தால் கூட சென்னை அணியினர் என்னை ஆட வைத்துவிடுவார்கள்.’ எனப் பேசியிருந்தார்.

ஒரு சில போட்டிகளுக்கு முன்பாக போட்டிக்குப் பிறகான பரிசளிப்பு விழாவில் பேசும்போது, ‘நான் ஓய்வுபெறப் போகிறேன் என நினைக்கிறார்கள். ஆனால் நவம்பர், டிசம்பர் சமயத்தில்தான் அதைப் பற்றி முடிவெடுக்க முடியும்.’ என்றார்.

MS Dhoni
MS Dhoni

இந்த சீசனின் இடையிலேயே தோனி ஓய்வை அறிவிக்கக்கூடும் என்றெல்லாம் சில தகவல்கள் வெளியாகியிருந்தது. அதெல்லாம் வதந்தியாகவே போனது. இன்றைய போட்டியின் டாஸின் போதோ அல்லது போட்டிக்குப் பிறகான பரிசளிப்பு விழாவிலோ தோனி கட்டாயமாக அவரின் ஓய்வைப் பற்றி பேசுவார். என்ன பேசப்போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். மேலும், அவர் அடுத்தாண்டு Mentor ஆக வரவாய்ப்பிருக்கிறது என்றும் சொல்லப்படுகிறது.

தோனி என்ன முடிவு எடுக்க வேண்டுமென நீங்கள் நினைக்கிறீர்கள் என்பதைக் கமென்ட்டில் தெரிவியுங்கள்

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *