
ஜார்க்கண்ட் மாநிலத்தில் பாதுகாப்பு படையினருடன் நடைபெற்ற மோதலில் நக்சலைட் மூத்த தலைவர் ஒருவர் கொல்லப்பட்டார்.
ஜார்க்கண்ட் மாநிலத்தின் லத்தேகார் பகுதியில் பாதுகாப்பு படையினர் – நக்சலைட்கள் இடையே நேற்று மோதல் ஏற்பட்டது. இதில் நக்சலைட்கள் இருவர் கொல்லப்பட்டனர். ஒருவர் காயம் அடைந்தார். காயம் அடைந்த நபர் உடனே கைது செய்யப்பட்டு, அவரிடம் இருந்த ஆயுதம் பறிமுதல் செய்யப்பட்டது.