
மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும் வயநாடு தொகுதி காங்கிரஸ் எம்.பி.யுமான ராகுல் காந்திக்கு எதிராக ஜார்க்கண்டில் உள்ள சாய்பாசா எம்.பி. – எம்.எல்.ஏ நீதிமன்றம் ஜாமீனில் வெளிவர முடியாத வாரண்டை பிறப்பித்துள்ளது. மேலும், வரும் ஜூன் 26-ம் தேதி ராகுல் காந்தி நேரில் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
கடந்த 2018-ம் ஆண்டு காங்கிரஸ் கட்சி சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய ராகுல் காந்தி, அப்போதைய பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா குறித்து தெரிவித்த கருத்துக்களுக்கு பாஜகவில் இருந்து எதிர்ப்பு கிளம்பியது. 2003 குஜராத் கலவரத்தின் பின்னணியில், கொலை வழக்கில் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளும் ஒருவர் கூட பாஜகவின் தலைவராக முடியும் என்ற ரீதியில் ராகுல் கருத்து தெரிவித்திருந்தார்.