• May 24, 2025
  • NewsEditor
  • 0

இந்த வாரத் தொடக்கத்தில் கூகுள் நிறுவனத்தின் வருடாந்திர டெவலப்பர் மாநாடு I/O 2025 நடைபெற்றது. இதில் பல ஏஐ அப்டேட்களுடன் கூகுள், அதன் ஏஐ வீடியோ உருவாக்கும் மாடல் Veo 3 -ஐ வெளியிட்டது. இது கூகுள் ஃப்ளோ தளத்தின் செயல்பாட்டை வியக்கத்தக்கதாக மாற்றியிருக்கிறது.

Veo 3

Veo 3 ஒரு அப்கிரேடட் மாடலாக மட்டுமல்லாமல் வீடியோவுடன் ஆடியோவையும் உருவாக்கி வெகுவாக மக்களை ஈர்த்துள்ளது.

Google I/O 2025

Veo 3 -ல் உரையாகவும் படங்களாகவும் கொடுக்கப்படும் உள்ளீடுகளுக்கு, நிஜ உலகில் உள்ள இயற்பியலுடனும், சரியான உதட்டசைவுடனும் சத்தத்துடன் கூடிய வீடியோவை உருவாக்கிக்கொடுக்கும்.

இந்த ஏஐ மாடலில் வீடியோக்களை உருவாக்க முயற்சி செய்துள்ள வீடியோக்கள் நிஜ வீடியோகளைப் போலவே இருப்பதாகவும், வித்தியாசம் கண்டறியவே திணறுவதாகவும் நெட்டிசன்கள் கூறிவருகின்றனர்.

இதற்கு உதாரணமாக, “a man doing stand-up comedy in a small venue tells a joke (include the joke in the dialogue)” என்ற எளிமையான உளீட்டுக்கு Veo 3 உருவாக்கியுள்ள வீடியோ வைரலாக பரவிவருகிறது.

இந்த ஏஐ நிஜம் போலவேத் தோன்றும் வீடியோக்கள் மட்டுமல்லாமல், சவுண்ட் எஃபக்ட்ஸ், பின்னணி இரைச்சல்கள், வசனங்கள் என எல்லாவற்றிலும் கலக்குவதாக நெட்டிசன்கள் புகழ்ந்துள்ளனர்.

Veo 3 உதவியுடன் உருவாக்கப்பட்ட இன்னும் சில வீடியோக்களைப் பார்க்கலாம்.

Veo 3 ஒரே உள்ளீட்டில் பாடல் வீடியோக்களை உருவாக்கும்,

பிதாகரஸ் தேற்றம் சொல்லித்தரவும் பயன்படும்…

ஒரு ஆக்‌ஷன் படத்தின் காட்சி…

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *