
புதுடெல்லி: ‘ஆபரேஷன் சிந்தூர்’ ராணுவ நடவடிக்கை மூலம் பாகிஸ்தானின் பயங்கரவாத ஆதரவு அம்பலப்படுத்தப்பட்டுள்ளது என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
டெல்லியில் நடைபெற்ற எல்லை பாதுகாப்புப் படை நிகழ்ச்சியில் உரையாற்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, "ஆபரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கை மிகப் பெரிய வெற்றியை பெற்றுள்ளது. அரசியல் ரீதியாக பிரதமர் மோடி எடுத்த துணிச்சலான முடிவு, நமது உளவுத்துறை வழங்கிய துல்லியமான தகவல்கள், நமது ஆயுதப்படைகளின் அற்புதமான தாக்குதல் ஆகியவற்றின் கூட்டு முயற்சிக்கு கிடைத்த வெற்றி இது.