• May 23, 2025
  • NewsEditor
  • 0

புதுடெல்லி: இந்​தி​யா- பாகிஸ்​தான் இடையி​லான போர் நிறுத்​தம் சர்​வ​தேச மத்​தி​யஸ்​தத்​தால், குறிப்​பாக அமெரிக்​கா​வின் செல்​வாக்​கால் ஏற்​பட​வில்லை என்று வெளி​யுறவு அமைச்​சர் எஸ்​.ஜெய்​சங்​கர் மீண்​டும் திட்டவட்டமாக கூறினார். நெதர்​லாந்து ஊடகம் ஒன்​றுக்கு எஸ்​.ஜெய்​சங்​கர் பேட்டி அளித்​தார்.

அப்​போது அவர் கூறிய​தாவது: பாகிஸ்தானுக்கு எதிரான ஆபரேஷன் சிந்​தூர் இன்​னும் தொடர்​கிறது. ஏனென்​றால் அந்த நடவடிக்​கை​யில் ஒரு தெளி​வான செய்தி இருந்​தது. ஏப்​ரல் 22-ம் தேதி நாம் கண்​டது போன்ற செயல்​கள் (பஹல்​காம் தாக்​குதல்) நடந்​தால், அதற்கு பதிலடி தரப்​படும் என்​பது​தான் அது. போர் நிறுத்த முயற்சி மே 10-ம் தேதி பாகிஸ்​தான் ராணுவத்​தால் தொடங்​கப்​பட்​டது. போரை நிறுத்த தயா​ராக இருப்​ப​தாக பாகிஸ்​தான் ராணுவம் ஹாட்​லைனில் கூறியது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *