
சென்னை: கால் வளைந்ததால் நடக்க முடியாத ஒன்றரை வயது குழந்தைக்கு 6 மணி நேரம் சிக்கலான அறுவை சிகிச்சை மேற்கொண்டு சென்னை அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை மருத்துவர்கள் குழந்தைக்கு மறுவாழ்வு அளித்துள்ளனர்.
காஞ்சிபுரத்தை சேர்ந்த தம்பதி சின்ராஜ் – பவானி. அங்குள்ள பல்பொருள் அங்காடியில் பணியாற்றி வருகின்றனர். இவர்களின் ஒன்றரை வயது குழந்தை தியாஷ் சந்திரன். வலது கணுக்காலில் பிரச்சினை ஏற்பட்டு, கால் வளைந்ததால் நடக்க முடியாத நிலையில் இருந்தார். குழந்தையை பெற்றோர் சென்னை அண்ணா சாலையில் உள்ள அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் அனுமதித்தனர்.