
புதுடெல்லி: இந்தியா – பாகிஸ்தானுக்கு இடையேயான சமீபத்திய மோதலை வர்த்தக வாக்குறுதிகள் மூலம் தீர்த்து வைத்ததாக ட்ரம்ப் மீண்டும் மீண்டும் வலியுறுத்தி வரும் நிலையில், அதனை ஒரு முறை கூட நிராகரிக்காமல் பிரதமர் மோடி மவுனம் காப்பது ஏன் என காங்கிரஸ் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.
இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் ஊடகப்பிரிவு பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கூறுகையில், “கடந்த 11 நாட்களில் 8 முறை அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், இந்தியா பாகிஸ்தான் போர் நிறுத்த ஒப்பந்தத்துக்கு தானே காரணம் எனத் திரும்பத் திரும்பக் கூறியுள்ளார். அவரது உற்ற நண்பரான பிரதமர் மோடியோ அதுகுறித்து மவுனம் காக்கிறார். ட்ரம்ப் இந்தியப் பிரதமர் மோடி, பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் இருவரையும் பாராட்டுகிறார். அதற்கு அர்த்தம், இந்தியாவும் பாகிஸ்தானும் ஒரே நிலையில் உள்ளன. இதனை நாம் ஏற்றுக்கொள்ள முடியாது.