
‘டிமான்டி காலனி’ திரைப்படம் வெளியாகி இன்றுடன் 10 ஆண்டுகள் ஆகின்றன. இதன் முதல் 2 பாகங்கள் மாபெரும் வரவேற்பைப் பெற்றன. தற்போது 3-ம் பாகத்தை உருவாக்கி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால், அதனை படக்குழு உறுதி செய்யவில்லை.
தற்போது ‘டிமான்டி காலனி’ வெளியாகி 10 ஆண்டுகள் ஆனதை முன்னிட்டு அஜய் ஞானமுத்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர், “என் மகிழ்ச்சியைக் கொண்டாடவும் நன்றி தெரிவிக்கவும் சரியான நேரம் இது. 10 வருடங்களுக்கு முன்னால் தமிழ்த் திரையுலகில் பல இளம் தொழில்நுட்ப கலைஞர்களுடன் எனது இயக்குநர் பயணத்தை ஆரம்பித்தேன். இப்போது எனது முதல் படம் ‘டிமான்டி காலனி’ 10 வருடங்கள் நிறைவு செய்திருப்பது உணர்வுப்பூர்வமான தருணமாக உள்ளது.