
‘டப்பா ரோல்’ என்று பேசியது சர்ச்சையானது தொடர்பாக நடிகை சிம்ரன் விளக்கமளித்துள்ளார். சமீபத்தில் விருது வழங்கும் விழா ஒன்றில் சிம்ரன் பேசும்போது, “டப்பா ரோல் பண்ணுவதற்கு பதில் ஆன்ட்டி ரோல் எவ்வளவோ மேல்” என்று பேசினார். அந்தச் சமயத்தில் ஜோதிகா நடித்த ‘டப்பா கார்டல்’ வெப் சீரிஸ் வெளியாகி இருந்தது.
சிம்ரன் பேச்சை வைத்து பலரும் ஜோதிகாவைதான் குறிப்பிட்டார் என்று பலரும் செய்திகள் வெளியிட்டார்கள். ஆனால், இந்த சர்ச்சைக்கு எந்தவொரு பதிலுமே கூறாமல் இருந்தார் சிம்ரன். தற்போது அவர் அளித்த பேட்டியில் இந்த சர்ச்சைக் குறித்த கேள்விக்கு, “அதை நானும் பார்த்தேன். அவரவர் ஊகங்களுக்கு எழுதிக் கொண்டார்கள்.