• May 22, 2025
  • NewsEditor
  • 0

பாலிவுட் நடிகர் சல்மான் கான் மும்பை பாந்திராவில் உள்ள கேலக்ஸி அபார்ட்மெண்ட் என்ற கட்டிடத்தில் வசித்து வருகிறார். கடந்த ஆண்டு சல்மான்கானை கொலை செய்ய முயற்சி நடந்தது.

சல்மான்கான் வீட்டின் மீது குஜராத் சிறையில் அடைக்கப்பட்டுள்ள லாரன்ஸ் பிஷ்னோய் கூட்டத்தை சேர்ந்தவர்கள் துப்பாக்கியால் சுட்டனர்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து சல்மான் கானுக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அதோடு மும்பையில் உள்ள அவரது வீட்டிற்கும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. சல்மான் கான் வீட்டிற்கு அருகில் வருபவர்கள் தீவிரமாக கண்காணிக்கப்படுகின்றனர்.

சல்மான் கான் வீட்டிற்கு நுழைய மர்ம நபர் ஒருவர் முயற்சி செய்துள்ளார். அவரை போலீஸார் மடக்கி பிடித்துள்ளனர். ஜிதேந்திர குமார் என்ற அந்த நபர் கடந்த 20-ம் தேதி காலையில் சல்மான் கான் வீட்டிற்கு அருகில் சுற்றி வந்தார்.

அங்கு பாதுகாப்புக்கு நின்ற போலீசார் அந்த நபரை சம்பவ இடத்தில் இருந்து செல்லும்படி கேட்டுக்கொண்டனர். இதனால் போலீஸாரும், ஜிதேந்திர குமாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதில் ஜிதேந்திர குமார் தனது மொபைல் போனை தரையில் போட்டு உடைத்தார். இச்சம்பவத்தை தொடர்ந்து போலீஸ் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டது. அன்று மாலை ஜிதேந்திர குமார் மீண்டும் சல்மான் கான் வீட்டிற்குள் நுழைய முயன்றார்.

இந்த முறை கேலக்ஸி கட்டிடத்தில் வசிக்கும் மற்றொருவரின் காரில் மறைந்து உள்ளே செல்ல முயன்றார். ஆனால் போலீஸார் அவரை கண்டுபிடித்து கைது செய்தனர்.

அவரிடம் விசாரித்தபோது அவரது சொந்த ஊர் சத்தீஷ்கர் என்றும், சல்மான் கானை பார்க்கும் நோக்கில் அவரது வீட்டிற்குள் நுழைய முயன்றதாக குறிப்பிட்டுள்ளார். அந்த நபரிடம் மேற்கொண்டு விசாரிப்பதற்காக உள்ளூர் போலீஸில் ஒப்படைக்கப்பட்டார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *