• May 22, 2025
  • NewsEditor
  • 0

‘ஆட்டநாயகன் சூர்யகுமார்!’

மும்பை இந்தியன்ஸ் அணி டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை 59 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியிருக்கிறது. இந்தப் போட்டியை வென்றதன் மூலம் மும்பை அணி ப்ளே ஆப்ஸூக்கும் தகுதிப்பெற்றிருக்கிறது. மும்பை அணியின் சார்பில் சூர்யகுமார் யாதவ் 73 ரன்களை அடித்து நாட் அவுட்டாக இருந்தார். அவருக்குதான் ஆட்டநாயகன் விருதும் வழங்கப்பட்டது.

Suryakumar Yadav

‘என் மனைவிக்காக…’

விருதை வாங்கிவிட்டு சூர்யகுமார் யாதவ் பேசுகையில், ’13 போட்டிகளில் ஆடி முடித்துவிட்டோம். என் மனைவி ஒரு சுவாரஸ்யமான விஷயத்தை பகிர்ந்துகொண்டார். ‘நீ எல்லா அவார்டையும் வாங்கிவிட்டாய். ஆனால், ப்ளேயர் ஆப் தி மேட்ச் அவார்டை மட்டும் வாங்கவில்லை.’ என்றார். அதனாலயே இந்த அவார்ட் மிகச்சிறப்பானதென நினைக்கிறேன்.

இந்தக் கோப்பையை அவளிடம் கொடுத்துவிடுவேன். ஒரு வீரராவது கடைசி வரை நின்று ஆடுவது முக்கியம் என நினைத்தோம். கடைசி வரை நின்றால் ஏதாவது ஒரு ஓவரில் 15-20 ரன்களை எடுத்துவிடுவோம் என்பதில் உறுதியாக இருந்தோம்.

Suryakumar Yadav
Suryakumar Yadav

நமன் தீரும் களத்துக்குள் வந்து என்னோடு தீர்க்கமாக அவரின் ஆற்றலை பகிர்ந்துகொண்டார். அதுதான் போட்டியின் திருப்புமுனையாக இருந்தது.’ என்றார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *