
‘தக் லைஃப்’ படத்தின் ‘சுகர் பேபி’ பாடல் சிங்கிள் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளது. ரஹ்மானின் இதமூட்டும் இசையும், த்ரிஷாவின் தோற்றமும் வெகுவாக ஈர்த்துள்ளது.
கமல்ஹாசனும் மணிரத்னமும் ‘நாயகன்’ படத்துக்குப் பிறகு இணைந்துள்ள படம், ‘தக் லைஃப்’. இதில் சிலம்பரசன், அபிராமி, த்ரிஷா, அசோக் செல்வன், ஜோஜு ஜார்ஜ், நாசர் உள்பட பலர் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்துள்ளார். ரவி கே சந்திரன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.