
சுற்றுலா பயணி ஒருவரின் தலையில் இருந்த கரப்பான் பூச்சியை அகற்றி உதவ முயன்ற பெண்ணிடம் அந்த சுற்றுலா பயணி ஆக்ரோஷப்பட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
தாய்லாந்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இது தொடர்பான வீடியோ ஒன்று facebook பக்கத்தில் பகிரப்பட்டதை அடுத்து இணையதளத்தில் வைரலானது.
வைரலாகும் வீடியோவில் ஒரு பெண், ஃபூகெட்டில் உள்ள போ டோங் கடற்கரை அருகே நடந்து செல்லும் போது, ஒரு சுற்றுலா பயணியின் தலையில் கரப்பான் பூச்சி இருப்பதை கண்டுள்ளார்.
இதனை அடுத்து உதவி செய்யும் உணர்வில் அந்த கரப்பான் பூச்சியை சுற்றுலா பயணியின் தலையிலிருந்து அகற்றினார். இதற்கு நன்றி சொல்வதற்கு பதிலாக அந்த சுற்றுலா பயணி ஆக்ரோஷத்துடன் ”அது என் செல்லப்பிராணி” என்று கூச்சலிட்டார்.
இந்த சம்பவம் அங்கு இருப்பவர்களை குழப்பத்திலும் அதிர்ச்சியிலும் ஆழ்த்தியது. அதன் பின்னர் அந்த சுற்றுலா பயணி கீழே அமர்ந்து, கரப்பான் பூச்சி கையில் ஊர்ந்து வந்தவுடன் அதனை எடுத்துக்கொண்டு செல்கிறார்.
இந்த வீடியோ தான் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதற்கு பயனர்கள் பலரும் பல கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.