
புதுடெல்லி: சமக்ர சிக்ஷா திட்டத்தின் கீழ் கல்வி நிதியில் ஆண்டுதோறும் ரூ.2000 கோடிக்கும் அதிகமான பங்கை மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளதாக குற்றம் சாட்டி உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தாக்கல் செய்துள்ளது.
மூத்த வழக்கறிஞர் பி. வில்சன், வழக்கறிஞர்கள் ரிச்சர்ட்சன் வில்சன் மற்றும் அபூர்வ் மல்ஹோத்ரா ஆகியோரால் வரைவு செய்யப்பட்ட இந்த வழக்கு, தமிழ்நாடு மாநில வழக்கறிஞர் சபரிஷ் சுப்பிரமணியன் மூலம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.