• May 21, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: ஊதிய ஒப்பந்தப் பேச்சுவார்த்தையை விரைவாக நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் வரும் 27-ம் தேதி அரசுப் போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.

இது தொடர்பாக போக்குவரத்துக் கழக தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஊதிய ஒப்பந்தப் பேச்சுவார்த்தை தொடர்ந்து தாமதமாகி வருகிறது. கடந்த பிப். 13-ம் தேதி பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதன் பின்னர் பேச்சுவார்த்தை நடத்த அரசுத் தரப்பில் எவ்வித நடவடிக்கையும் இல்லை.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *