
பிரபல ஹாலிவுட் நடிகர் டென்ஸல் வாஷிங்டன். எ சோல்ஜர்ஸ் ஸ்டோரி, க்ரை ஃபிரீடம், மால்கம் எக்ஸ், ஃபிளைட், த டிராஜடி ஆஃப் மெக்பத், அமெரிக்கன் கேங்ஸ்டர், கிளாடியேட்டர் 2 உட்பட பல படங்களில் நடித்துள்ளார். குளோரி, ட்ரெய்னிங் டே ஆகிய படங்களில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியதற்காக ஆஸ்கர் விருதுகளைப் பெற்றுள்ளார்.
இவர் இப்போது நடித்துள்ள படம் ‘ஹையஸ்ட் டு லோயஸ்ட்’. ஸ்பைக் லீ இயக்கியுள்ள இந்தப் படம், கேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. பின்னர் இவ்விழாவில் டென்ஸல் வாஷிங்டனுக்கு வாழ்நாள் சாதனையாளருக்கான தங்கப்பனை விருது வழங்கப்பட்டது. விருதை இயக்குநர் ஸ்பைக் லீ அவருக்கு வழங்கினார். அங்குக் கூடியிருந்தவர்கள் எழுந்து நின்று கைதட்டி வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.