
புதுடெல்லி: மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கூறும்போது, “ஆபரேஷன் சிந்தூர் தொடர்பாக பாகிஸ்தானுக்கு அதிகாரப்பூர்வமாக தகவல் அளித்ததாக மத்திய அரசு ஒப்புக் கொள்கிறது. இந்த தாக்குதலில் இந்திய விமானப் படை எத்தனை போர் விமானங்களை இழந்தது’’ என்று கேள்வி எழுப்பி உள்ளார்.
இதுகுறித்து பாஜக மூத்த தலைவர் அமித் மாளவியா சமூக வலைதளத்தில் நேற்று வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது இந்திய விமானப் படை எத்தனை போர் விமானங்களை இழந்தது என்று ராகுல் காந்தி தொடர்ச்சியாக கேள்வி எழுப்பி வருகிறார்.