
புதுடெல்லி: வக்பு திருத்த சட்டத்துக்கு எதிரான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் கூறும்போது, “பொதுவாக நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் சட்டங்களில் நீதிமன்றங்கள் தலையிடுவது கிடையாது’’ என்று தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட வக்பு திருத்த சட்டம் கடந்த ஏப்ரல் 8-ம் தேதி அமலுக்கு வந்தது. இதை எதிர்த்து காங்கிரஸ், திமுக, சமாஜ்வாதி, ஏஐஎம்ஐஎம் மற்றும் முஸ்லிம் அமைப்புகள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்களை அப்போதைய தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா, நீதிபதிகள் சஞ்சய் குமார்,கே.வி.விஸ்வாதன் அமர்வு விசாரித்து வந்தது.