
‘சென்னை vs ராஜஸ்தான்!’
சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கிடையேயான போட்டி டெல்லியில் நடக்கவிருக்கிறது. இந்தப் போட்டிக்கான டாஸை ராஜஸ்தான் அணியின் கேப்டன் சாம்சன் வென்றிருந்தார். முதலில் பௌலிங் செய்யப்போவதாக அறிவித்தார்.
‘பெருமைக்காக ஆடி பலனில்லை!’
டாஸில் சென்னை அணியின் கேப்டன் தோனி பேசியதாவது, ‘நாங்கள் ஏற்கெனவே அடுத்த சீசனுக்கான வேலையைத் தொடங்கிவிட்டோம். பேட்டிங் ஆர்டரில் யார் யாரை எந்த ரோலில் அடுத்த சீசனில் இறக்கலாம் என்பதையும் கண்டறிய வேண்டும். பவர்ப்ளேயில் வீச எங்களுக்கு இன்னும் ஒரு பௌலர் தேவைப்பட்டுகிறார்.
மற்ற இடங்களில் நாங்கள் நன்றாகவே வீசியிருக்கிறோம். கடந்த இரண்டு போட்டிகளில் நாங்கள் நன்றாகவே பேட்டிங் ஆடியிருக்கிறோம். நாங்கள் இந்த சீசனை விட்டு வெளியேறிய உடனேயே அடுத்த சீசனைப் பற்றி யோசிக்க ஆரம்பித்துவிட்டோம். பெருமைக்காக சகாப்தத்துக்காக சில போட்டிகளை வெல்ல வேண்டும் என நாங்கள் நினைக்கவில்லை.

அடுத்த சீசனுக்கான விடைகளைத் தேடியே எங்களின் நோக்கத்தை வைத்துக் கொண்டோம். இதுவரை கொஞ்சம் தயங்கி தயங்கி ஆடியிருப்பார்கள். இப்போது ஆடும் போட்டிகளில் எந்த அழுத்தமும் இல்லை. அதனால் சுதந்திரமாக ஆடலாம்.’ என்றார்.