
சென்னை: கடந்த சில நாட்களாக பெய்த திடீர் மழையால் பாதிக்கப்பட்டுள்ள அனைத்து பயிர்களையும் கணக்கெடுப்பு செய்து விவசாயிகளுக்கு உரிய நிவாரணத்தை வழங்க வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: "தமிழகத்தில் கடந்த 5, 6 நாட்களாக பெய்த திடீர் மழையால் விவசாயத் தொழில் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக தஞ்சை, மயிலாடுதுறை, நாகை, திருவாரூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டப் பகுதிகளில் பெய்த கனமழையால் வாழை, எள், வெற்றிலை மற்றும் அறுவடைக்குத் தயாராக இருந்த நெற்பயிர்கள் மழைநீரில் நனைந்து சேதமடைந்தன.