
புதுடெல்லி: நீதித்துறைப் பணியில் சேர குறைந்தபட்சம் மூன்று ஆண்டுகள் வழக்கறிஞராகப் பணியாற்றியிருக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர். கவாய், நீதிபதிகள் ஏ.ஜி. மசிஹ் மற்றும் கே.வினோத் சந்திரன் ஆகியோர் அடங்கிய அமர்வு அளித்த தீர்ப்பில், “சிவில் நீதிபதிகள் (ஜூனியர் பிரிவு) தேர்வு எழுதுவதற்கு குறைந்தபட்சம் மூன்று ஆண்டுகள் வழக்கறிஞராக பயிற்சி தேவை என்று நாங்கள் கருதுகிறோம்” என்று தெரிவித்துள்ளனர். இருப்பினும், இந்த உத்தரவு நடந்து கொண்டிருக்கும் நீதித்துறை ஆட்சேர்ப்புக்கு பொருந்தாது என்றும் நீதிமன்றம் தெளிவுபடுத்தியது.