
சென்னை: காவல், சிறைத் துறை சார்பில் ரூ.668.71 கோடி மதிப்பில் கட்டப்பட உள்ள புதிய கட்டிடங்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று காணொலி வாயிலாக அடிக்கல் நாட்டினார்.
இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: மாநிலத்தின் அமைதியைப் பேணிப்காத்து, சட்டம் ஒழுங்கைப் பராமரிக்கும் காவல் துறையின் பணிகள் சிறக்க, புதிய காவல் நிலையங்கள், காவலர் குடியிருப்புகள் கட்டுதல், “உங்கள் சொந்த இல்லம்” திட்டத்தின் கீழ் காவலர்களுக்கு குடியிருப்புகள், பாதுகாப்புப் பணிகளுக்காக ரோந்து வாகனங்களை கொள்முதல் செய்தல், காவல் துறையின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல் போன்ற பல்வேறு திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது.