• May 20, 2025
  • NewsEditor
  • 0

‘டூரிஸ்ட் ஃபேமிலி’ திரைப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது.

சசிக்குமாரின் கரியரில் அதிகம் வசூல் செய்த படங்களில் இப்படமும் ஒன்று என்கிறார்கள். படத்தைப் பார்த்துவிட்டு நடிகர்கள், இயக்குநர்கள் எனப் பலரும் படக்குழுவுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

Tourist Family

அந்த வகையில் ரஜினி, தனுஷ், அனிருத் எனப் பலரும் ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படக்குழுவுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்திருந்தனர்.

தற்போது இயக்குநர் ராஜமௌலியும் ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ திரைப்படத்தைப் பார்த்துவிட்டு படக்குழுவைப் பாராட்டி தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.

இதயத்தைத் தொடுகிறது

அந்தப் பதிவில் ராஜமௌலி, ” ‘டூரிஸ்ட் ஃபேமிலி” என்ற மிக அற்புதமான திரைப்படத்தைப் பார்த்தேன். திரைப்படம் இதயத்தைத் தொடுகிறது. வயிறு குலுங்க வைக்கும் நகைச்சுவையாலும் திரைப்படம் நிரம்பியிருக்கிறது.

அபிஷன் ஜீவிந்தின் அற்புதமான எழுத்து மற்றும் இயக்கம், தொடக்கம் முதல் இறுதி வரை என்னை ஆர்வத்துடனேயே வைத்திருந்தது. சமீபத்திய வருடங்களில் மிகச் சிறந்த திரைப்பட அனுபவத்தை அளித்ததற்கு நன்றி. இதைத் தவறவிடாதீர்கள்…” எனக் குறிப்பிட்டு பதிவிட்டிருக்கிறார்.

ராஜமௌலியின் பதிவுக்கு நன்றி தெரிவித்து இயக்குநர் அபிஷன் ஜீவிந்த், “இன்னும் என்னால் இதை நம்ப முடியவில்லை. நான் அவரின் திரைப்படங்களில் மிகப்பெரிய நட்சத்திரங்களை என் கண்களில் பார்த்திருக்கிறேன்.

ஒரு நாள் அந்த உலகங்களை உருவாக்கியவர் என் பெயரை உச்சரிப்பார் என்று கற்பனைகூட செய்து பார்க்கவில்லை. ராஜமௌலி சார், நீங்கள் இந்தச் சிறுவனின் கனவை வாழ்க்கையை விடப் பெரிதாக்கிவிட்டீர்கள்!” எனப் பதிவிட்டிருக்கிறார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *