
கடந்த பிப்ரவரி மாதம் அமெரிக்க அதிபர் ட்ரம்ப், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது.
கடந்த வார ரஷ்யா – உக்ரைன் நாட்டு பிரதிநிதிகள் இடையே நடந்த பேச்சுவார்த்தையில் ஓரளவு சமாதானத்துக்கு வந்தது.
இந்நிலையில், நேற்று ட்ரம்ப் மற்றும் ரஷ்யா அதிபர் புதின் இடையே தொலைப்பேசியில் பேச்சுவார்த்தை நடந்திருக்கிறது.
“ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுடனான இரண்டு மணிநேர தொலைபேசி அழைப்பை இப்போது தான் முடித்தேன். இந்தப் பேச்சுவார்த்தை நன்றாக போனது என்று நம்புகிறேன். ரஷ்யா, உக்ரைன் உடனடியாக போர் நிறுத்தம் மற்றும் முக்கியமாக போரை முடிப்பதைக் குறித்து பேச்சுவார்த்தையைத் தொடங்கும்.
அதற்கான நிபந்தனைகளை அவர்களே பேசி முடிவு செய்வார்கள். காரணம், இதுவரை நடந்த பேச்சுவார்த்தைகளில் நடந்த மற்றவர்களுக்குத் தெரியாத விஷயங்கள் அவர்களுக்கு மட்டும் தான் தெரியும். உரையாடல் சிறப்பாகவே அமைந்தது.
ரஷ்யாவிற்கு அமெரிக்கா உடன் பெரியளவில் வணிகம் செய்ய வேண்டும். இந்தப் போர் முடிந்தப்பிறகு, அதற்கு நான் ஒப்புக்கொள்வேன். இதன் மூலம், ரஷ்யா வேலைவாய்ப்புகள் மற்றும் செல்வத்தை பெருக்க பெருமளவில் வாய்ப்புகள் உண்டு.
அதேபோல, உக்ரைன் தனது நாட்டை மீண்டும் கட்டமைக்க வணிகம் பெருமளவில் உதவும். ரஷ்யா மற்றும் உக்ரைனுக்கு இடையே உடனடியாக பேச்சுவார்த்தைத் தொடங்கும்.

புதினுடனான உரையாடலுக்குப் பிறகு, உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி, ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன், பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன், இத்தாலி பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி, ஜெர்மனி அதிபர் ஃப்ரீட்ரிக் மெர்ஸ் மற்றும் பின்லாந்து ஜனாதிபதி அலெக்சாண்டர் ஸ்டப் ஆகியோருக்கு இது குறித்து தகவல் தெரிவித்துவிட்டேன்.
போப்பைப் பிரதிநிதித்தவப்படுத்தி வாடிகன் இந்த பேச்சுவார்த்தையை நடத்த ஆர்வமாக உள்ளது. பேச்சுவார்த்தை தொடங்கட்டும்!” என்று பதிவிட்டுள்ளார்.
— Donald J. Trump (@realDonaldTrump) May 19, 2025