
புதுடெல்லி: இந்தியா – பாகிஸ்தான் இடையிலான சண்டை நிறுத்தத்தில் அமெரிக்க அதிபர் ட்ரம்பின் பங்கு எதுவும் இல்லை என்று மத்திய வெளியுறவுத் துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி கூறியுள்ளார். பாதுகாப்பு தொடர்பான நாடாளுமன்ற குழு முன் வெளியுறவுத் துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி நேற்று மாலை ஆஜராகி ‘ஆபரேஷன் சிந்தூர்’ குறித்து விளக்கம் அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது: இந்தியா – பாகிஸ்தான் இடையிலான மோதல் வழக்கமான ஆயுதங்களை கொண்ட மோதலாகவே இருந்தது. பாகிஸ்தானிடம் இருந்து அணுசக்தி சமிக்ஞை எதுவும் இல்லை. பாகிஸ்தானில் உள்ள விமானப் படை தளங்களை நாம் தாக்கி சேதப்படுத்தி விட்டதால் எச்கியூ-9 ஏவுகணை பாதுகாப்பு அமைப்பு உட்பட சீனாவின் ஆயுதங்களை பாகிஸ்தானால் பயன்படுத்த முடியவில்லை.