
புதுடெல்லி: வளர்ச்சிய அடைந்த வேளாண் உத்தரவாத இயக்கம் வரும் 29 முதல் ஜூன் 12 வரை நாடு முழுவதும் நடைபெற உள்ளதாக மத்திய வேளாண் – விவசாயிகள் நலன் மற்றும் ஊரக வளர்ச்சி அமைச்சர் சிவராஜ் சிங் சவுஹான் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் உள்ள தேசிய ஊடக மையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய சிவராஜ் சிங் சவுஹான், "வளர்ச்சி அடைந்த வேளாண் சங்கல்ப இயக்கம் மே 29 முதல் ஜூன் 12 வரை நாடு முழுவதும் நடைபெற உள்ளது. பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையின் கீழ், வளர்ச்சியடைந்த இந்தியா என்ற தொலைநோக்குப் பார்வை தீவிரமாகப் பின்பற்றப்பட்டு வருகிறது. இந்த இலக்கை அடைய, வளர்ச்சியடைந்த வேளாண்மை, நவீன விவசாய நடைமுறைகள் மற்றும் வளமான விவசாயிகள் ஆகியவற்றுக்கான அடித்தளத்தை உருவாக்குவது அவசியம்.