
‘தனி ஒருவன் 2’ குறித்த அறிவிப்பு சரியான நேரத்தில் வெளியாகும் என்று தயாரிப்பாளர் அர்ச்சனா தெரிவித்துள்ளார்.
தனியார் விருது வழங்கும் விழா ஒன்றில் இயக்குநர் மோகன் ராஜா மற்றும் தயாரிப்பாளர் அர்ச்சனா மேடையேறினார்கள். அவர்களிடம் ‘தனி ஒருவன் 2’ குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு மோகன் ராஜா “‘தனி ஒருவன் 2’ மீது இவ்வளவு ஆர்வமாக இருப்பதற்கு அனைவருக்கும் நன்றி. எங்களுடைய பெருமைக்குரிய படம் என்று தயாரிப்பாளர் அர்ச்சனா சொல்லிக் கொண்டே இருப்பார். கதை எல்லாம் கேட்டுவிட்டு ரொம்ப சூப்பரா இருக்கு, சரியான நேரம் வரும் போது சொல்கிறோம் என்று தெரிவித்துள்ளார்கள்” என்றார்.