
சென்னை: தமிழகத்தில் இன்று (திங்கள்கிழமை) 17 மாவட்டங்களிலும், நாளை 12 மாவட்டங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், இன்று (மே.19) கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரியில் மிக கனமழையும், நாளை (மே.20) கோவையில் கனமழையும், நீலகிரி மாவட்டத்தில் கன முதல் மிக கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது என்றும் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த தென்மண்டல வானிலை ஆய்வு மையத்தின் தலைவர் அமுதா, “மத்திய மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனையொட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதேபோல மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் வரும் 22-ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகிறது. இது வடக்கு திசையில் நகர்ந்து வலுவடையக்கூடும்.