
சேலம்: காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் மேட்டூர் அணைக்கு இன்று (மே/19) நீர்வரத்து வினாடிக்கு 6,233 கன அடியாக அதிகரித்துள்ளது. அணையின் நீர்மட்டம் 108.82 அடியாக உயர்ந்துள்ளது.
கோடை காலம் நீடிக்கும் நிலையில் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் கடந்த சில தினங்களாக மழை பெய்து வருகிறது. சில நாட்களுக்கு முன்னர் வரை, மேட்டூர் அணைக்கான நீர்வரத்து 3,000 கன அடிக்கு மேல் இருந்தது. இது நேற்று 4,764 கன அடியாக அதிகரித்தது. இந்நிலையில் நேற்று மேட்டூர் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் கனமழை கொட்டியது.