• May 19, 2025
  • NewsEditor
  • 0

ஒரு வீட்டில் தண்ணீர் இணைப்பு என்பது அடிப்படையான ஒன்று. சரியான தண்ணீர் இணைப்பு இருந்தால் தண்ணீர் வீணாவது, தேவைப்படும் இடத்தில் தண்ணீர் இல்லாமல் போவது போன்ற சிக்கல்காளை தவிர்க்கலாம். எந்த அறைக்கு எந்த மாதிரியான தண்ணீர் இணைப்பு இருக்கவேண்டும் என்பதற்கான வழிகாட்டல் இதோ…

கிச்சனில் நீர் இணைப்பை ஏற்படுத்த வேண்டும் எனில், பாத்திரம் கழுவும் இடம், கை கழுவிமிடம், தண்ணீர் சுத்திகரிக்கும் மெஷின், அடிப்படைத் தேவை களுக்குத் தண்ணீர் பிடிக்கும் குழாய் என நான்கு வகையான குழாய் இணைப்புகள் தேவைப்படலாம். இத்துடன் கழிவு நீர் வெளியேற்றும் ஒரு குழாயும் இணைக்க வேண்டியிருக்கும்.

பாத்திரம் கழுவும் இடத்திலிருந்து வெளியேறும் தண்ணீரில் சில நேரங்களில் காய்கறி கழிவுகளும் கலந்து பைப்புகளை அடைத்துவிடும். இதனால் பாத்திரம் கழுவும் இடத்திலிருந்து வெளியேறும் தண்ணீரைத் தனி பைப் மூலம் வெளியேற்றுவது நல்லது.

உங்கள் வீட்டில் தோட்டம் இருக்கிறது என்றால் கிச்சனிலிருந்து வெளியேறும் அனைத்து தண்ணீரையும் ஒரே குழாய் மூலம் வெளியேற்றி தோட்டத்துக்குப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

தண்ணீர் இணைப்பு

குளியலறை மற்றும் கழிவறை எனில் கைகழுவும் இடம், கழிவறை, குளிக்கும் இடத்தில் தண்ணீர் பிடிப்பதற்குத் தேவையான குழாய் போன்றவை அவசியம்.
நீங்கள் ஹீட்டர் இணைப்பை ஏற்படுத்தப் போகிறீர்கள் எனில், வெந்நீர் இணைப்புக்குத் தனியாக குழாய் பொறுத்த வேண்டும். இவை தவிர்த்து, பாத் டப், ஷவர் போன்றவை பொறுத்துகிறீர்கள் எனில், அதற்கு தனியாக குழாய்கள் அமைக்க வேண்டியிருக்கும்.

வெந்நீர் வரும் பைப் எனில், சி.பி.வி.சி பைப்புகளைத் தேர்வு நல்லது. இந்த வகை பைப்புகள் வெப்பத்தால் உருகுவதைத் தடுக்கும் தன்மை கொண்டவை.
வீட்டின் வெளிப்புறம் அல்லது தோட்டத்துக்கான தண்ணீர் இணைப்பு அமைக்கிறீர்கள் எனில், பாத்ரூமிலிருந்து  கூடுதல் இணைப்பு அமைத்துக் கொள்ளலாம்.

போர் இணைப்பு இல்லை நகராட்சி, மாநகராட்சி அல்லது தனியார் தண்ணீர் லாரிகள் மூலம் டேங்குகளை நிரப்பி தண்ணீர் பயன்படுத்துகிறீர்கள் எனில், தேவைக்கு ஏற்ற பெரிய தொட்டிகளைத் தேர்வு செய்யலாம். ஏனெனில் தனியார் தண்ணீர் லாரிகள் தொட்டிகளுக்கு ஏற்பவே கட்டணம் வசூல் செய்வார்கள்.

உங்கள் வீட்டில் போர்வெல் இணைப்பு இருக்கிறது, அதே நேரம் வெளியில் இருந்தும தண்ணீர் வாங்கி பயன்படுத்துகிறீர்கள் எனில்,  தனித்தனியாக 1000 லிட்டர் கொள்ளளவு கொண்ட இரண்டு டேங்குகளை வாங்கிப் பயன்படுத்தலாம். கறுப்பு நிறம் வெப்பத்தை எளிதில் உட்கிரகிக்கும் என்பதால், கறுப்பு நிற டேங்குகள் வாங்குவதைத் தவிர்த்து வெள்ளை, மஞ்சள் போன்ற நிறங்களில் தேர்வு செய்யலாம். ஆனால், கறுப்பு நிற டேங்குகளே விலை குறைவு.

குழாய்
குழாய்

வீட்டுக்குத் தேர்வு செய்யும் குழாய்கள்  ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் மற்றும் பி.வி.சி குழாய்கள் என இரண்டு ரகங்களில் கிடைக்கின்றன. வெந்நீர் வரும் குழாய்களுக்கு ஸ்டெயின்லெஸ் குழாய்களைத்தான் பயன்படுத்த வேண்டும். மற்ற இடங்களில் உங்களின் சாய்ஸ் என்றாலும் ஸ்டெயின்லெஸ் குழாய்களின் தரம் சிறப்பாக இருக்கும்.

குழாய்களைப் பொறுத்தவரை, ஆட்டோ மேட்டிக், ஒரு முறை அழுத்தினால் சில நிமிடங்களுக்கு தண்ணீர் வரும் குழாய், முழுவதுமாகத் திறக்கும் குழாய் என நிறைய வகைகள் மற்றும் மாடல்கள் இருக்கின்றன. 100 ரூபாயிலிருந்து பல ஆயிரங்கள் வரை குழாய்கள் கிடைக்கிறது. உங்கள் வீட்டின் தன்மை, பயன்படுத்தும் முறை, பயன்படுத்து வோர் வயது போன்றவற்றைப் பொறுத்து குழாய்களின் ரகங்களைத் தேர்வு செய்யலாம்.

 தண்ணீர் தொட்டி
தண்ணீர் தொட்டி

செப்டிக் டேங்குகளுக்கு நார்மல், பயோ செப்டிக் டேங்குகள் என இரண்டு ஆப்ஷன் இருக்கிறது. நார்மல் செப்டிக் டேங்க் எனில், ஆண்டுக்கு  ஒரு முறை கழிவு நீர் ஊர்தி மூலம் உறிஞ்சி எடுக்க வேண்டியிருக்கும். பயோ செப்டிக் டேங்க் எனில், வாரம் ஒரு முறை அல்லது இரண்டு முறை பாக்டீரியாக்கள் செலுத்த வேண்டியிருக்கும்.

கான்க்ரீட், சிமென்ட், பிளாஸ்டிக்  தொட்டிகள்!

தண்ணீரை சேகரிக்க வீட்டின் தரை தளத்தில் ‘சம்ப்’ எனப்படும் பெரிய தண்ணீர் கிடங்குகள் அமைத்துக் கொள்வது நல்லது. அதிலிருந்து மோட்டர்கள் மூலம் தண்ணீர் தொட்டிகளுக்கு தண்ணீரை ஏற்றி பயன்படுத்திக் கொள்ளலாம்.

வீட்டின் மேற்புறம் அமைக்கப்படும்  ஓவர் ஹெட்  தண்ணீர் தொட்டிகளில் இருந்துதான் வீட்டுக்கு தண்ணீர் மற்ற குழாய் இணைப்புகள் மூலம் சப்ளை ஆகும். நீங்கள் தண்ணீர் தொட்டி அமைக்கிறீர்கள் எனில், கான்க்ரீட் தொட்டி, சிமென்ட் தொட்டி, பிளாஸ்டிக்  தொட்டி என மூன்று வழிமுறைகள் இருக்கின்றன.  தரத்தை ஒப்பிடும்போது, மற்ற இரண்டு வகையைவிட கான்கிரீட் தொட்டிகள் சிறந்தது. ஆனால் செலவு அதிகம்.

குழாய்
குழாய்

நீங்கள் வீட்டின் மேல்பகுதியில் கட்டுமானம் கட்டமாட்டீர்கள் என்று உறுதியாக இருந்தால், சிமென்ட் தொட்டி அல்லது கான்க்ரீட் தொட்டியைத் தேர்வு செய்யலாம். வீட்டின் மேற்பகுதியில் எப்போது வேண்டுமானாலும் கட்டுமானம் கட்ட வாய்ப்பு இருக்கிறது என்பவர்கள் பிளாஸ்டிக் தொட்டிகளைத் தேர்வு செய்யலாம். இதை அப்புறப்புறத்துவது எளிது. செலவும் குறைவு.

சிமென்ட் தொட்டி அல்லது கான்க்ரீட் தொட்டி எனில், தொட்டியின் உள்புறம் டைல்ஸ் ஒட்டிவிட வேண்டும். இதனால் தண்ணீர் கசிவு தடுக்கப்படும்.
தொட்டி கட்டும்போது உங்களின் தேவைக்கேற்ப எத்தனை லிட்டர் தொட்டி வேண்டுமானாலும் கட்டிக்கொள்ளலாம்.

பிளாஸ்டிக் தொட்டி எனில், உங்கள் வீட்டில் போர்வெல் இணைப்பு இருந்தால், ஐந்து பேர் கொண்ட குடும்பத்துக்கு 1000 முதல் 2000 லிட்டர் கொள்ளவு கொண்ட  தொட்டியைத் தேர்வு செய்யலாம்.

நீர் இணைப்புகளை சரியாக கையாள்வது மிக முக்கியம்!

நிறைய இணைப்புகள் உள்ள குழாய்களுக்கு டிரையினேஜ் சேம்பர்ஸ் (Drainage chamber) பொறுத்துவது அவசியம். இதனால் பழுது பார்க்க எளிதாக இருக்கும். தண்ணீர் இணைப்புகளை நிறுத்தும் வால்வு அமைப்பது அவசியம். அதாவது, இந்த வால்வை மூடிவிட்டால் வீட்டுக்கு தண்ணீர் செல்லும் அனைத்து இணைப்புகளிலும் தண்ணீர் நிறுத்தப்பட்டுவிடும். இது பழுதுபார்க்கும் சூழல்களில் அவசியம் தேவையாக இருக்கும்.

குழாய்
குழாய்

நீர் இணைப்புகளை சரியாக கையாள்வது மிக முக்கியம். வீட்டில் எங்கேனும் நீர்க்கசிவுகள் இருந்தால் அதை உடனே சரிசெய்துவிடுவது நல்லது. கண்டுகொள்ளாமல் இருந்தால் கட்டுமான சுவர்கள் பாதிக்கப்படும். தண்ணீர் குழாய் இணைப்பு வசதிகளை ஆரம்பத்திலேயே சரியாகச் செய்துவிட்டால், பிற்பாடு கைவைக்க வேண்டிய அவசியமே இருக்காது!

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *