
பூஞ்ச்: காஷ்மீரின் பூஞ்ச் பகுதியில் மீட்கப்பட்ட 42 வெடிக்காத குண்டுகளை இந்திய ராணுவம் மற்றும் ஜம்மு காஷ்மீர் போலீஸார் நேற்று செயலிழக்கம் செய்தனர். இந்தியா – பாகிஸ்தான் இடையே ஏற்பட்ட போரில் காஷ்மீரை நோக்கி பாகிஸ்தான் ராணுவம் பீரங்கி தாக்குதல் நடத்தியது.
இதில் எல்லை கிராமங்களில் உள்ள மக்கள் பலர் இறந்தனர். பூஞ்ச் பகுதியில் மட்டும் 12 பேர் உயிரிழந்தனர், 42 பேர் காயம் அடைந்தனர். வீடுகளும் சேதமடைந்தன.