• May 19, 2025
  • NewsEditor
  • 0

ரோக்கியமான உணவுகளைச் சாப்பிட வேண்டியது எவ்வளவு அவசியமோ, அதே அளவுக்கு சரியானதை, சரியான நேரத்தில் உண்பதும் அவசியம். சில உணவுகளை வெறும் வயிற்றில் சாப்பிடக் கூடாது என்று சொல்வார்கள். அவை எந்தெந்த உணவுகள்… ஏன் என்பதைப் பார்ப்போம்.

வெறும் வயிற்றில் சாப்பிடக் கூடாத உணவுகள்

சில வகை மருந்துகள்: டாக்டர் பரிந்துரைத்தால் மட்டுமே வெறும் வயிற்றில் மருந்தை எடுக்க வேண்டும். சில மருந்துகள், குடலின் அமிலத்தைப் பாதித்து, வயிற்றுப்புண், வயிற்று எரிச்சல், சோர்வு, மயக்கம் போன்ற பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும்.

தக்காளி: தக்காளியை வெறும் வயிற்றில் சாப்பிடும்போது அதில் உள்ள அமிலங்கள் வயிற்றில் உள்ள அமிலங்களுடன் வினைபுரிந்து கரையாத ஜெல் போன்ற பொருளை உருவாக்குகின்றன. இதனால், வயிற்றில் கற்கள் உருவாகும்.

வாழைப்பழம்: வெறும் வயிற்றில் வாழைப்பழத்தை உண்பதால், உடலில் மக்னீசியத்தின் அளவு திடீரென அதிகரிக்கிறது. இதனால் மக்னீசியம் மற்றும் கால்சியத்தின் சமநிலை பாதிக்கப்படும்.

சர்க்கரைவள்ளிக்கிழங்கு
சர்க்கரைவள்ளிக்கிழங்கு

டீ, காபி: காஃபைன் நிறைந்துள்ளது. வெறும் வயிற்றில் இவற்றைப் பருகும்போது குடல் பாதிப்படைகிறது. எனவே, காபி அல்லது டீக்கு முன் ஒரு டம்ளர் தண்ணீர் அருந்துவது நல்லது.

சர்க்கரைவள்ளிக்கிழங்கு: இதில் உள்ள பெக்டின், டானின் போன்றவை குடலில் அமிலச்சுரப்பைத் தூண்டும். இதனால் குடல்சுவர் பாதிக்கப்பட்டு அல்சர், எதுக்களிப்பு போன்ற பிரச்னைகள் உருவாகும்.

காரமான உணவு வகைகள்: குடல் பாதிப்பு அடைகிறது. அல்சர் போன்ற பிரச்னைகள் ஏற்பட வாய்ப்பை அதிகரிக் கிறது. வயிறு எரிச்சல் உண்டாகும்.

காரமான உணவு வகைகள்
காரமான உணவுகள்

கார்பனேட்டட் பானங்கள்: இதில் உள்ள அமிலங்கள் வயிற்றில் உள்ள அமிலங் களோடு வினைபுரிந்து செரிமானக் கோளாறு, வயிற்றுப்புண் உள்ளிட்ட பிரச்னைகளை உருவாக்கும்.

தயிர்: புரோபயாடிக் எனும் நல்ல பாக்டீரியா நிறைந்தது. வெறும் வயிற்றில் சாப்பிடும்போது அமுதமே நஞ்சாவது போல் நல்ல பாக்டீரியாவே குடலைப் பாதித்துவிடும்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *