
ரேப் இசையில் தற்போது மாஸ் காட்டி வருகிறார் பால் டப்பா. இவருடைய உண்மையான பெயர் அனிஷ்.
சுயாதீன பாடல்கள் மூலமாக தன்னுடைய இசைப் பயணத்தைத் தொடங்கியவர் ‘துருவ நட்சத்திரம்’ படத்தில் ‘His name is John’ பாடலைப் பாடி தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார்.
இதைத் தொடர்ந்து கடந்த ஆண்டு இவர் பாடியிருந்த ‘காத்து மேல’, ‘மக்காமிஷி’ ஆகிய பாடல்கள் இணையத்தில் தூள் கிளப்பியிருந்தன.
இப்படியான ஹிட் வரிசை மூலமாகப் பால் டப்பாதான் தற்போது டாப் சுயாதீன பாடகர்களில் முக்கியமானவர்.
சுயாதீன பாடகர்கள், பின்னணி பாடகர்கள் எனப் பலரும் நடிப்பின் பக்கம் வந்திருக்கிறார்கள். அந்த வரிசையில் தற்போது பால் டப்பாவும் இணைந்திருக்கிறார்.
இயக்குநர் விஜய் மில்டன் இயக்கும் தமிழ் – தெலுங்கு பைலிங்குவல் படமொன்றில் நடிப்பதற்கு கமிட்டாகியிருக்கிறார் பால் டப்பா.
இப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகவிருக்கிறார் பால் டப்பா. விஜய் மில்டன் இயக்கும் இப்படத்தில் டோலிவுட் நடிகர் ராஜ் தருண் நடிக்கவிருக்கிறார்.

பால் டப்பா நடிப்பது பற்றி இயக்குநர் விஜய் மில்டன், “பால் டப்பா ஒரு இளமை ஆற்றலைக் கொண்டிருக்கிறார்.
இது படத்தின் உணர்வுக்குப் பொருத்தமாக உள்ளது. அவர் தனது உண்மைக்காக வாழும் ஒரு கலைஞர். அந்த நேர்மை இந்த கதாபாத்திரத்துக்குத் தேவையானது!” எனக் கூறியிருக்கிறார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…