
புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே உள்ள பனையப்பட்டி உதயசூரியபுரத்தைச் சேர்ந்தவர் ரவி. இவரது மகள் வினோதா (வயது: 21).
இவர், இலுப்பூர் மதர்தெரசா நர்சிங கல்லூரியில் டிப்ளமோ படித்து வந்தார். இந்நிலையில், நேற்று வினோதாவிற்குப் பெண் குழந்தை பிறந்தது.
அதனை அறிந்த வினோதாவின் தாய் மற்றும் அவரது உறவினர்கள் மயானத்தில் புதைக்க அக்குழந்தையை எடுத்துச் சென்றனர்.
அதனைப் பக்கத்து வீட்டில் வசிக்கும் மூதாட்டி ஒருவர் பார்த்து அருகிலுள்ள போலீஸாரிடம் கூறியிருக்கிறார். இதனால், இன்ஸ்பெக்டர் கௌரி மற்றும் போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து குழந்தையை மீட்டு அரசு ஆரம்பச் சுகாதார நிலையத்திற்குச் சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர்.
அங்கிருந்த மருத்துவர் நிர்மலாவதனம், குழந்தைக்கு அவசர சிகிச்சை அளித்து குழந்தையையும், தாய் வினோதாவையும் புதுக்கோட்டை அரசு ராணியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக போலீஸார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டனர்.
அவர்களின் முதற்கட்ட விசாரணையில் வினோதா கல்லூரி மாணவர் ஒருவருடன் நட்பாக இருந்ததால், கருவுற்றது தெரிய வந்தது.
இதையடுத்து அந்தக் கல்லூரி மாணவரைக் கைது செய்ய போலீஸார் விரைந்துள்ளனர்.
இது தொடர்பாகக் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் கூறுகையில், “புதுக்கோட்டை மாவட்டத்தில் சமூக நலத்துறை சார்பில் தொட்டில் குழந்தைகள் திட்டம் செயல்படுகிறது.
குழந்தையை வளர்க்க இயலாதவர்கள் அரசு மருத்துவமனை, அங்கன்வாடி மையங்களில் குழந்தையை ஒப்படைக்க வேண்டும். அவர்களுக்கு அரசு எல்லா உதவிகளும் செய்யும்” என்றார்.
மாணவரோடு ஏற்பட்ட பழக்கத்தில் பிறந்த குழந்தையை மாணவி ஒருவர் உயிரோடு புதைக்க முயன்ற சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.