
பெங்களூரு: கர்நாடக மாநிலம் மங்களூருவை அடுத்துள்ள குந்தாப்பூர் சாலையில் நேற்று காலையில் பாகிஸ்தான் தேசிய கொடி கட்டப்பட்டிருந்தது. சாலையோரத்தில் பழுதாக நின்ற வாகனத்திலும் பாகிஸ்தான் கொடி கட்டப்பட்டிருந்தது. இதனால் அங்கு பஜ்ரங் தள், ஹனுமன் சேனா ஆகிய அமைப்பினர் குவிந்ததால் அங்கு போக்குவரத்து சிறிது நேரம் பாதிக்கப்பட்டது.
இதுகுறித்து பஜ்ரங் தள் நிர்வாகி சச்சின் குமார் அளித்த புகாரின்பேரில் குந்தாப்புரா புறநகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதுகுறித்து மர்ம நபர்கள் மீது 2 பிரிவுகளில் போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். குந்தாபுரா சாலையோரத்தில் பொருத்தப்பட்டுள்ள கேமராக்களை ஆய்வு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.