• May 18, 2025
  • NewsEditor
  • 0

சீரியல்கள் என்றாலே குடும்ப சண்டை, அழுகை, சோகம் என்ற பிராண்டிங்கிள் இருந்து ஃபன் மற்றும் ஸ்கூல் ஸ்டூடண்ட்ஸின் இயல்பான வாழ்க்கையை பிரதிபலிக்கும் விதமாக ‘கனா காணும் காலங்கள்’ சீரியல் அறிமுகம் ஆகியது. ‘கனவுகள் காணும் வயசாச்சு… இளமைக்கு முகவரி கிடைச்சாச்சு’ என்று அந்த சீரியலில் பாடலே ஹைப் ஏற்றும் விதமாக இருந்தது. 90’ஸ் கிட்ஸ் வாழ்க்கையில் கனா காணும் காலங்கள் சீரியல் ஒரு முக்கியமான அங்கம்.

கனா காணும் காலங்கள் சீசன் 1-ல் சங்கவி கதாபாத்திரத்தில் நடித்தவர் மோனிஷா ரவிசங்கர். கனா காணும் காலம் தொடருக்கு பின் மீடியாவில் இருந்து பிரேக் எடுத்து படிப்பில் கவனம் செலுத்தியவர் இப்போது திரைப்படங்கள் மூலம் மீண்டும் மீடியாவில் என்ட்ரியாகிறார். திரைப்பட கரியருக்க சென்னையில் செட்டில் ஆகியுள்ள மோனிஷாவுடன் ஒரு ஜாலியான உரையாடல். 

மோனிஷா

`மீடியாவிலிருந்து ஏன் பிரேக்?’

“நான் சின்ன வயசுல இருந்தே தியேட்டர் ஆர்டிஸ்ட். நிறைய ஸ்டேஜ் ஷோ பண்ணிருக்கேன். ஸ்டேஜ் ஷோ மூலமாகத் கனா காணும் சீரியல் நடிக்கும் வாய்ப்பு கிடைச்சுது. அப்போ நான் ஒன்பதாவது படிச்சுட்டு இருந்தேன். சீரியலில் ப்ளஸ் ஒன் படிக்கிற பொண்ணா நடிச்சேன். ஆரம்பத்துல படிப்பையும், நடிப்பையும் ஒரே நேரத்தில் சமாளிக்க கஷ்டப்பட்டேன். அப்புறம் பழகிருச்சு.

எனக்கு சினிமா, சீரியல், நடிப்பு இதெல்லாம் பயங்கர இஷ்டம். ஆனா, எங்க வீட்டை பொறுத்தவரை படிப்புக்குத் தான் முக்கியத்துவம். நான் டாக்டர் ஆகணுங்கிறது எங்க அப்பாவோட ஆசை. காலேஜ் சேர்ந்த பிறகும் கூட சில எபிசோட் பண்ணேன். ஆனா, படிப்புக்காக பிரேக் அவசியமா இருந்துச்சு”

`சங்கவி கதாபாத்திரம் பற்றி?’

“சங்கவி ரோல் என்னோட நிஜ கேரக்டரில் இருந்து ரொம்ப வேறுபட்டது. படபடனு பேசணும், கோபப்படணும்னு ஆரம்பத்தில் சவாலா இருந்துச்சு. அப்புறம் ரொம்ப பிடிச்சு போச்சு. சங்கவி கேரக்டர் பண்ணும் போது ஷூடிங் ஸ்பாட்டே அமிளி துமிளியா இருக்கும். நல்ல ஃப்ரெண்ட்ஸ் கிடைச்சாங்க. ஜாலியான நாள்கள் அது. இப்போ கூட என்னை பார்க்கிறவங்க, ‘சங்கவி’னு தான் கூப்பிடுறாங்க. 150 எபிசோட் பண்ணேன்.  படிப்புக்காக பிரேக் எடுத்தேன். வேற வழியே இல்லாமத்தான் சங்கவி செத்துப்போன மாதிரி காட்டி என் கேரக்டரை முடிச்சாங்க. ஆனா, இப்பவும் சங்கவி மக்கள் மனசுல உயிரோட தான் இருக்கானு நினைக்கிறேன்” 

மோனிஷா
மோனிஷா

`நியூஸ் ரீடரா இருந்தீங்கனு கேள்விப்பட்டோம் அது உண்மையா?’

“காலேஜ் படிக்கும் போது NDTV நியூஸ் சேனல்ல நியூஸ் ரீடரா வேலை பார்த்தேன். அப்புறம்  மேல்படிப்புக்காக கனடா போயிட்டேன். படிப்பை முடிச்சுட்டு துபாய்ல பல் மருத்துவரா வேலை பார்த்துட்டு இருந்தேன்”

`மருத்துவம் டு ஆக்டிங் எதனால்?’

“டாக்டரா வேலை பார்க்கும் போது நிறைய பட வாய்ப்புகளும், மாடலிங் வாய்ப்புகளும் வந்துச்சு. டாக்டர் புரோஃபஷனுக்காக எல்லாத்தையும் மிஸ் பண்ணிட்டேன். அப்பாவோட “ஆசைக்காக டாக்டர் படிச்சாச்சு, சம்பாதிச்சாச்சு. இப்போ எனக்கான டைம். திரும்பவும் நடிக்கணும்னு முடிவு பண்ணி சென்னை வந்து செட்டில் ஆயிட்டேன். இப்போ ‘இதயம் முரளி’ படத்துல ஒரு ரோல் பண்ணிட்டு இருக்கேன்.

அடுத்தடுத்து கதைகளும் கேட்டுக்கிட்டு இருக்கேன். என்னைப் பொறுத்தவரை சின்ன கேரக்டர், பெரிய கேரக்டர்னு பார்க்காம நடிக்க கிடைக்கிற வாய்ப்பில் முழுசா திறமையை வெளிப்படுத்தணும்னு நினைக்கிறேன்”

மோனிஷா
மோனிஷா

`கனா காணும் சீரியலில் உங்க கூட நடிச்சவங்க கூட நட்பு தொடருதா?’

“எல்லாருமே சோஷியல் மீடியாவில் கனெக்டட். சிலர் போன் பண்ணியும் பேசுவாங்க. சீரியல் முடிஞ்ச நேரத்துல இர்ஃபான் படம் ரிலீஸ் ஆச்சு. அந்தப் படத்தை பார்த்துட்டு போன் பண்ணி பேசுனேன். அப்புறம் படிப்புல பிஸி ஆகிட்டேன். ஒரு கெட் டு கெதர் நடந்துச்சு. வெளிநாட்டுல இருந்ததால அதை அட்டன் பண்ண முடியல. சமீபத்துல ஒரு சேனல் இண்டர்வியூல வீடியோ காலில் எல்லோரும் பேசினோம். அந்த கேங் எப்போதுமே ஸ்பெஷல்”

`கனா காணும் காலங்கள் அடுத்தடுத்த சீசன் பார்ப்பதுண்டா?’

“ஆரம்பத்தில் பார்த்துட்டு இருந்தேன். இப்போ பார்க்கிறது இல்ல”

மோனிஷா
மோனிஷா

`உங்க ரிலேஷன்ஷிப் ஸ்டேட்டஸ் என்ன?’

“இப்போதைக்கு ஜாலியான சிங்கிள். கரியரில் கவனம் செலுத்திட்டு ரிலேஷன் ஷிப் பத்தி அப்புறம் யோசிக்கலாம்”

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *