
பாமக நிறுவனர் ராமதாஸ் 2-வது நாளாக நடத்திய நிர்வாகிகள் கூட்டத்தை அன்புமணி புறக்கணித்தார். பாமகவில் நெருக்கடியான சூழல் உருவாகி இருப்பதாக கட்சியின் கவுரவத் தலைவர் ஜி.கே.மணி தெரிவித்துள்ளார்.
அண்மையில் பாமக தலைவர் பதவியில் இருந்து அன்புமணியை நீக்குவதாக ராமதாஸ் அறிவித்தார். ஆனால், தன்னை நீக்க யாருக்கும் அதிகாரம் இல்லை என்று அன்புமணி தெரிவித்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் தைலாபுரத்தில் நடந்த நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தை அன்புமணியும், கட்சி நிர்வாகிகள் 80 சதவீதம் பேரும் புறக்கணித்தனர்.