• May 17, 2025
  • NewsEditor
  • 0

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி எழுதிய `தேசிய கல்விக் கொள்கை 2020 எனும் மதயானை’ என்ற புத்தகம் வெளியீட்டு விழா சென்னை அண்ணா நூலகத்தில் இன்று மாலை 5 மணியளவில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில், முதலமைச்சர் ஸ்டாலினுடன், மத்தியப் பிரதேச முன்னாள் முதலமைச்சர் திக் விஜய் சிங், முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி கோபால கவுடா, மேனாள் இஸ்ரோ இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை ஆகியோர் முக்கிய நபர்களாகக் கலந்துகொண்டனர்.

`தேசிய கல்விக் கொள்கை 2020 எனும் மதயானை’ புத்தக வெளியீட்டு விழா

மேலும், திமுக அமைச்சர்கள், நாடாளுமன்ற & உறுப்பினர்கள், திமுக கூட்டணி கட்சி தலைவர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியில், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வரவேற்புரையாற்றியதைத் தொடர்ந்து, `தேசிய கல்விக் கொள்கை 2020 எனும் மதயானை’ நூலை ஸ்டாலின் வெளியிட திக் விஜய் சிங் பெற்றுக்கொண்டார். அதைத்தொடர்ந்து, ஸ்டாலினுக்கு அங்குசம் ஒன்றை அன்பில் மகேஷ் பரிசளித்தார்.

முதல்வர் ஸ்டாலின்
முதல்வர் ஸ்டாலின்

தேசியக் கல்விக் கொள்கை உருவாக்கத்தில் ஆர்.எஸ்.எஸ் போன்ற மதவாத அமைப்புகளின் பங்களிப்பு என்ன? இதனால் ஆசிரியர்களுக்கு என்ன பாதிப்பு? ஏழை எளிய மாணவர்களைக் கல்வியிலிருந்து இது வெளியேற்றும் என ஏன் சொல்கிறோம்? போன்ற பொதுமக்களின் பல்வேறு கேள்விகளுக்கு இந்த புத்தகத்தில் விளக்கப்பட்டு உள்ளது. இந்நூலினை ஆங்கிலத்திலும் அன்பில் மகேஷ் எழுதியிருக்கிறார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *