
கமல்ஹாசன் – சிம்பு கதாபாத்திரங்களின் மோதலை மையப்படுத்தி, தாதா வகையறா பின்புலத்துடன் திரைக்கதை உருவாகி இருப்பதை தெளிவாகக் காட்டுகிறது ‘தக் லைஃப்’ படத்தின் ட்ரெய்லர்.
மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு, அசோக் செல்வன், த்ரிஷா, அபிராமி, ஜோஜு ஜார்ஜ், நாசர் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘தக் லைஃப்’. மெட்ராஸ் டாக்கீஸ், ராஜ்கமல் இன்டர்நேஷனல் மற்றும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன. தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் மற்றும் கன்னடம் மொழிகளில் ஜூன் 5-ம் தேதி வெளியாகவுள்ளது. தற்போது, இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி கவனம் ஈர்த்துள்ளது.