
ஆறுமுககுமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாக இருக்கும் படம் ‘ஏஸ்’(ACE) .
கன்னட நடிகை ருக்மிணி வசந்த் இந்தப் படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்திருக்கிறார். ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்திருக்கிறார்.
மே 23 ஆம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.
இந்நிலையில் ‘ஏஸ்’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று (மே 17) நடைபெற்றது.
இதில் கலந்துகொண்ட விஜய் சேதுபதி, “முதன் முதல்ல ‘வர்ணம்’ படத்துல நடிக்கிறதுக்கு என்னைய ரெக்கமண்ட் பண்ணது ஆறுமுககுமார் சார்தான். காலத்துக்கும் அதை மறக்க மாட்டேன்.
‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ படத்துல நான் நடிக்குறதா இல்ல. வேற ஒருத்தர்தான் நடிக்குற மாதிரி இருந்துச்சு. ஆனா, அந்தப் படத்துக்கும் என்னைய ஆறுமுககுமார் சார்தான் ரெக்கமண்ட் பண்ணிருக்காரு.
நம்மல பத்தி நமக்கே முழுசா தெரியாத காலக்கட்டத்துல நம்ம மேலே யாரோ ஒருத்தர் வைக்கிற நம்பிக்கை இருண்ட வீட்டில் அகல்விளக்கு ஏத்துற மாதிரி. என்னோட வாழ்க்கையில அந்த விளக்கை ஏத்துனது அவர்தான்.
எங்க அப்பாவோட கடைசி காலத்துல தன் புள்ள உறுப்படுமா? எனக் கேட்டபோது ‘வர்ணம்’ படத்துல நடிச்ச புகைப்படத்தைக் காமிச்சு உன் புள்ளைக்கு நடிக்க வருது, நல்ல வந்துருவேன்னு சொன்னேன்.

அதனால் எனக்கு நடிக்க சந்தர்ப்பத்தை உருவாக்கிக் கொடுத்ததுக்கு நன்றி சார்” என்று தெரிவித்திருக்கிறார்.
“சில பேரை எனக்குப் பார்த்த உடனே பிடிக்கும். ஆனால் சில பேரைப் பிடிக்காது. அந்த மாதிரி இந்தப் படத்தோட இசையமைப்பாளர் ஜஸ்டினைப் பார்த்த உடனே பிடிச்சது. ரொம்ப சூப்பரா இந்தப் படத்துக்கு இசையமைச்சுருக்காரு” என்றிருக்கிறார்.
தொடர்ந்து நடிகை ருக்மிணி வசந்த் குறித்துப் பேசிய அவர், “தன்னுடைய சீன் என்ன? வேலை என்ன? அதை எப்படிப் பண்ணனும்னு ஆழமாகப் புரிஞ்சுக்கிட்டு சின்சியராக வேலைப் பார்க்கக்கூடிய ஒரு ஆர்டிஸ்ட்” என்று பேசியிருக்கிறார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…