
அஜித் குமார் நடிப்பில் சமீபத்தில் வெளியாகியிருந்த ‘குட் பேட் அக்லி’ படம் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது.
சினிமாவில் மட்டுமல்ல அதே சமயத்தில் ரேஸிங்கிலும் ஒரு வெற்றியைப் பதிவு செய்திருந்தார் அஜித் குமார்.
ரேஸிங் சீசனைக் கணக்கிட்டு தற்போது ரேஸ், சினிமா என இரண்டு பக்கங்களில் கவனம் செலுத்துகிறார் அஜித் குமார்.
இந்நிலையில் இந்தியன் எக்ஸ்பிரஸ் இதழுக்கு அளித்த நேர்காணலில் ரேஸிங், சினிமா என இரண்டையும் கையாள்வது தொடர்பாகப் பேசியிருக்கிறார் அஜித் குமார்.
அஜித் குமார் பேசுகையில், “நவம்பர் முதல் பிப்ரவரி மாதம் வரையிலான ரேஸிங் இல்லாத காலகட்டத்தில் ஒரு படம் நடிக்க முடிந்தால், ஒவ்வொரு ஆண்டும் என்னால் ஒரு படத்தை வெளியிட முடியும்.
இப்படிச் செய்தால் அடுத்த ஆறு ஆண்டுகளுக்காவது நான் ரேஸிங்கில் கவனம் செலுத்த முடியும். அது அணியின் உரிமையாளராக இருந்தாலும் சரி, ஓட்டுநராக இருந்தாலும் சரி.
ஒரு நடிகராக எனக்கென்று ஒரு பெயரைக் காப்பாற்ற வேண்டியுள்ளது. ரேஸிங் மற்றும் நடிப்பு இரண்டிற்கும் இடையே தனித்தனியாக நேரத்தை ஒதுக்குவது எனது திரைப்பட வாழ்க்கை முடிந்துவிட்டது என்று நினைக்கும் விமர்சகர்களை அமைதிப்படுத்தும்.

முந்தைய காலத்தில் ரேஸிங், நடிப்பு என இரண்டையும் நான் ஒரே நேரத்தில் சரியாகச் செய்யவில்லை என உணர்ந்தேன். அப்போது படப்பிடிப்புக்கும், ரேஸிங்கிற்கும் இடையே ஓடிக்கொண்டிருந்தேன்.
எனவே, அப்போது பல ஏற்ற இறக்கங்களைச் சந்தித்தேன். இனி ரேஸிங்கின்போது நடிக்காமல் இருப்பதே சிறந்த வழி என்று நினைக்கிறேன்” எனக் கூறியிருக்கிறார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…