
சசிகுமார் நடித்திருக்கும் ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ திரைப்படம் திரையரங்குகளில் அதிரடியான வரவேற்பைப் பெற்று வருகிறது.
சசிகுமார் நடித்த படங்களில் அதிகம் வசூலித்த திரைப்படங்களில் இதுவும் ஒன்று. அந்தளவுக்கு ப்ளாக்பஸ்டர் ஹிட் அடித்திருக்கிறது இந்த ஃபீல் குட் திரைப்படம்.
சசிகுமாருடன், சிம்ரன், யோகி பாபு, பகவதி பெருமாள் எனப் பலரும் நடித்திருந்தனர்.
படத்தைப் பார்த்த பலரும் நல்ல விமர்சனங்களைத் தங்களின் சமூக வலைத்தளப் பக்கங்களில் எழுதி வருகிறார்கள்.
இந்நிலையில், படக்குழுவினருக்கு ரஜினி காந்த் வாழ்த்து தெரிவித்தது குறித்து தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார் சசிக்குமார்.
நல்ல திரைப்படங்களுக்கு ஊக்கம் கொடுக்கும் வகையில் அப்படக்குழுவினரை அழைத்துப் பாராட்டுவதைப் பல ஆண்டுகளாக ரஜினி காந்த் செய்து வருகிறார்.
ரஜினி காந்த்தின் பாராட்டு குறித்து சசிகுமார், “‘படம் சூப்பர்’ என யார் சொன்னாலுமே மனம் சொக்கிப் போகும். சூப்பர் ஸ்டாரே படம் சூப்பர் எனச் சொன்னால், சந்தோசத்திற்குச் சொல்லவா வேண்டும்.
‘அயோத்தி’, ‘நந்தன்’ படம் பார்த்துப் பாராட்டிய ரஜினி சார் ஹாட்ரிக் பரவசமாக ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படம் பார்த்து, ‘சூப்பர் சசிகுமார்!’ என அழுத்திச் சொன்னார். ‘தர்மதாஸாகவே வாழ்ந்திருக்கீங்க. சொல்ல வார்த்தையே இல்ல. அந்தளவுக்கு வாழ்ந்துட்டீங்க. பல சீன்களில் கலங்கடிச்சிட்டீங்க.

சமீப காலமா உங்களோட கதை தேர்வு வியக்க வைக்குது சசிகுமார்’ என ரஜினி சார் சொல்லச் சொல்ல நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவில்லை.
படத்தின் ஒவ்வொரு காட்சியையும் மனதில் நிறுத்தி, அத்தனைப் பேரின் பங்களிப்பையும் வாழ்த்தி ரஜினி சார் சொன்ன ஒவ்வொரு வார்த்தைகளும் ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படக் குழுவுக்குக் கிடைத்த பொக்கிஷ பட்டயம்.
தட்டிக் கொடுத்து உற்சாகமூட்டும் உங்களின் தங்கமான மனசுக்கு மிக்க நன்றி ரஜினி சார்!” எனக் குறிப்பிட்டுப் பதிவிட்டிருக்கிறார்.
இதனைத் தொடர்ந்து இப்படத்தின் அபிஷன் ஜீவிந்த் இசையமைப்பாளர் அனிருத் பாராட்டியது பற்றி தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் போட்டிருக்கிறார்.
அந்தப் பதிவில் அவர், “மற்றொரு சப்ரைஸாக இசையமைப்பாளர் அனிருத்திடம் இருந்து அழைப்பு வந்தது.
Another surprise call from our rockstar @anirudhofficial sir!
“One of the best movies I’ve watched,” he said.
He also mentioned how much he enjoyed everything in the theatre — from the performances and music to the direction.
Thank you so much, sir 🙂— Abishan Jeevinth (@Abishanjeevinth) May 16, 2025
நான் பார்த்த சிறந்த திரைப்படங்களில் ஒன்று ‘டூரிஸ்ட் பேமிலி’. என்றார்.
அவர் எப்படிப் படத்தின் அத்தனை விஷயங்களையும் திரையரங்குகளில் பார்த்து ரசித்தார் என்பதையும் கூறினார்.” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…