
சென்னை: அதிமுக வளர்ச்சி பணிகள் குறித்து வருமே மே 29, 30 தேதிகளில் மாவட்ட செயலாளர்களுடன் கட்சியின் பொதுச்செயலாளர் பழனிசாமி ஆலோசனை நடத்த உள்ளார்.
தமிழகத்தில் 2026 சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வருகிறது. அரசியல் கட்சிகளும் தேர்தலுக்கு தயாராகி வருகின்றன. அதிமுக கூட்டணி சிந்தாமல், சிதறாமல் உள்ளது. தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்கள் உள்ள நிலையில், அதிமுக, பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ளது.