• May 16, 2025
  • NewsEditor
  • 0

அஜித் தற்போது ரேஸ், சினிமா என இரண்டு பக்கமும் மிளிர்ந்துக் கொண்டிருக்கிறார்.

சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான ‘குட் பேட் அக்லி’ திரைப்படமும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

Ajith Kumar Racing

இதுமட்டுமன்றி, சமீபத்தில் ‘பத்ம பூஷன்’ விருதை குடியரசு தலைவர் திரெளபதி முர்முவிடமிருந்து பெற்றிருந்தார்.

அந்த விருது கொடுத்திருக்கும் பொறுப்பு தொடர்பாக இந்தியன் எக்ஸ்பிரஸுக்கு அளித்த பேட்டியில் பேசியிருக்கிறார் அஜித்.

அஜித் பேசுகையில், “விருது பெற்றது மிகப்பெரிய அனுபவமாக இருந்தது. ஆனால், அத்துடன் எனக்கு நிறைய பொறுப்புகளும் வந்திருக்கின்றன.

அந்த விருது ஏற்படுத்திக் கொடுத்த கௌரவத்துடன் வாழ வேண்டும்.

இந்த விஷயம் என்னை கவனத்துடன் செயல்பட வைத்திருக்கிறது.

நான் இப்போது திரைப்படங்களிலும் நடிக்கிறேன், ரேஸிங்கிலும் ஈடுபட்டு வருகிறேன்.

கடினமாக உழைத்து என்னைச் சுற்றியுள்ள அனைவரையும் பெருமைப்படுத்துவேன்.

‘பத்ம பூஷன்’ விருது என்னை மிகவும் ஊக்கப்படுத்தியிருக்கிறது. அதுமட்டுமன்றி, நான் சரியான பாதையில் இருக்கிறேன் என நம்பிக்கை அளித்திருக்கிறது.

அஜித்
அஜித்

இன்னும் திரைப்படங்களிலும், மோட்டார் ஸ்போர்ட்களிலும் சிறப்பாக செயல்பட என்னை தூண்டுகிறது.

ஒரு பணிக்கு கிடைக்கும் வெகுமதியின் மீது நான் அதிகளவில் கவனம் செலுத்தியது கிடையாது.

பணமும் நமக்கு கிடைக்கும் அங்கீகாரமும் நாம் செய்த வேலைகளுக்கு கிடைக்கும் ரிசல்ட் என நான் நம்புகிறேன்.

நான் என்னுடைய கடன்களை அடைப்பதற்காகதான் சினிமாவிற்குள் வந்தேன்.

அதனால் என்னுடைய கவனத்தை என்னுடைய பணி நெறிமுறைகளின் பாதையில் இருந்து ஒருபோதும் தவறாமல் பார்த்துக் கொண்டேன்.” எனக் கூறியிருக்கிறார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *