• May 16, 2025
  • NewsEditor
  • 0

‘நீரஜ் சோப்ரா விளக்கம்!’

ஒலிம்பிக்ஸில் இந்தியாவுக்காக தங்கம் மற்றும் வெள்ளி வென்ற ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா சார்ந்து சமீபத்தில் ஒரு சர்ச்சை எழுந்திருந்தது.

நீரஜ் சோப்ரா (Neeraj Chopra)

அதாவது, பெங்களூருவில் நடக்கும் ஒரு ஈட்டி எறிதல் தொடருக்காக அவர் பாகிஸ்தானை சேர்ந்த அர்ஷத் நதீமை அழைத்திருந்தார். அந்த விஷயம் சமூக வலைதளங்களில் சர்ச்சையாகியிருந்தது. அதற்கு விளக்கமளித்து நீரஜ் சோப்ரா ஒரு அறிக்கையை வெளியிட்டிருந்தார்.

இந்நிலையில் இப்போது நீரஜ் சோப்ரா அந்த சர்ச்சை குறித்து பேசியிருக்கிறார். அவர் பேசியதாவது, ‘நான் முதலில் ஒரு விஷயத்தை தெளிவுப்படுத்த விரும்புகிறேன். அர்ஷத் நதீமுடன் எனக்கு நெருங்கிய நட்பு இருந்ததில்லை. இந்த தடகள வட்டாரத்தில் உலகளவில் எனக்கு நிறைய நண்பர்கள் இருக்கிறார்கள்.

நீரஜ் சோப்ரா - Neeraj Chopra
Neeraj Chopra – நீரஜ் சோப்ரா

இனி முன்பு போல அந்த வீரருடன் பழக முடியாது. என்னிடம் யாராவது மரியாதையாக பேசினால் நானும் அவர்களுடன் மரியாதையுடன் பழகுவேன். எல்லா வீரர்களுடனும் இதே வழக்கத்தைதான் கடைபிடிக்கிறேன். இனியும் அப்படி தொடரவே விரும்புகிறேன்.’ என்றார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *