• May 16, 2025
  • NewsEditor
  • 0

‘ரஷ்யா – உக்ரைன் போர் எப்போது முடிவுக்கு வரும்?’ – உலகம் முழுக்க உள்ள கேள்விகளில் இதுவும் ஒன்று.

அதற்கு அச்சாணியாக, ரஷ்யா அதிபர் புதினும், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியும் துருக்கியில் நேருக்கு நேர் சந்திந்துக் கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், துருக்கிக்கு புதின் செல்லாததால் உலக நாடுகளுக்கு பெரும் ஏமாற்றம்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை, புதின், ‘துருக்கியில் உக்ரைனும், ரஷ்யாவும் நேருக்கு நேர் சந்தித்து கொள்ளும்’ என்று கூறியிருந்தார். புதின் உடனடியாக 30 நாள் போர் நிறுத்தத்தை அறிவித்தால் மட்டுமே, ஜெலன்ஸ்கி அந்தப் பேச்சுவார்த்தையில் கலந்துகொள்வார் என்று ஐரோப்பிய நாடுகள் கூறியது.

ஆனால், அமெரிக்க அதிபர் ட்ரம்பின் அழுத்தத்தினால், ஜெலன்ஸ்கி பேச்சுவார்த்தைக்கு ஒப்புக்கொண்டார்.

ட்ரம்ப்

அதன்படி, நேற்று துருக்கிக்கு பயணமானார் ஜெலன்ஸ்கி. ஆனால், ரஷ்யாவில் இருந்து புதின் சார்பாக ஒரு குழு துருக்கிக்கு சென்றதே தவிர, புதின் செல்லவில்லை.

புதின் துருக்கிக்கு செல்லாததால், ஜெலன்ஸ்கியும் பேச்சுவார்த்தையும் கலந்துகொள்ளமாட்டார் என்று கூறப்பட்டது.

இதை உறுதி செய்யும்விதமாக, தற்போது கிடைத்துள்ள தகவலின் படி, இன்று துருக்கி இஸ்தான்புல்லில் நடக்க உள்ள ரஷ்யா – உக்ரைன் பேச்சுவார்த்தையில், ரஷ்யா மற்றும் உக்ரைன் அதிகாரிகள் கலந்துகொள்வார்களே தவிர, இரு நாட்டு அதிபர்களும் அந்தப் பேச்சுவார்த்தையில் கலந்துகொள்ளமாட்டார்கள்.

ஜெலன்ஸ்கி

ஜெலன்ஸ்கி தனது எக்ஸ் பக்கப் பதிவில், “இந்தப் பேச்சுவார்த்தையில், ‘போர் நிறுத்தம்’ தான் எங்களுக்கு முதன்மையானது. ரஷ்யா இந்த சந்திப்புகளை தீவிரமாக எடுத்துகொள்ளவில்லை என்றும், அவர்களுக்கு போரை முடிவுக்கு கொண்டுவர வேண்டாம் என்பதும் தெரிகிறது. ஆனால், அவர்கள் சந்திப்பின் போது குறைந்தபட்சம் எதையாவது பேச விரும்புகிறாரா? என்பதைப் பார்ப்போம்” என்று பதிவிட்டுள்ளார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *