
நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி உள்ள படம் ‘Thug Life’. இந்தப் படம் அடுத்த மாதம் ரிலீஸ் ஆக உள்ளது.
இந்தப் படத்தில் கமல்ஹாசன், மணிரத்னம், ஏ.ஆர்.ரஹ்மான், சிம்பு, திரிஷா, அசோக் செல்வன், நாசர் என நடிகர்கள் பட்டாளம் குவிந்துள்ளனர்.
தற்போது #Thuglife என்கிற ஹேஷ்டேக்குடன் ஒரு போட்டோவை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் சிம்பு.
Cinema • Student • Music #Thuglife ♥️ pic.twitter.com/OYRIL5tvrJ
— Silambarasan TR (@SilambarasanTR_) May 15, 2025
அந்த போட்டோவிற்கு, “சினிமா – ஸ்டூடன்ட் – மியூசிக்” என்கிற கேப்ஷன் கொடுத்துள்ளார்.
ஜூன் மாதத்தின் முதல் வாரத்தில் வெளியாகி உள்ள இந்தப் படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது.
இந்தப் படத்தை கமலின் சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தான் தயாரிக்கிறது.
இதன் டிரெய்லர் வரும் சனிக்கிழமை (மே 17) வெளியாகிறது மற்றும் இந்தப் படத்தின் ஆடியோ லான்ச் வரும் மே 24-ம் தேதி நடக்க உள்ளது.